Tamil FOSS Conference Logo

தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2025

நாள்: ஜூலை 18,19 2025

இடம்: St. Joseph's Institute of Technology, Old Mahabalipuram Road, Kamaraj Nagar, Semmancheri, Chennai, Tamil Nadu 600119

நிகழ்வைப் பற்றி

விடுதலை மாநாடு

விடுதலை - இதை விரும்பாதோர் யார்? விடுதலை விதையைக் கணினிக்குள் விதைக்கும் ஓர் ஒப்பற்ற திருவிழாவே இம்மாநாடு! "எது செய்க நாட்டுக்கே எனத் துடித்த சிங்கமே! இன்றே, இன்னே புது நாளை உண்டாக்கித் தமிழ் காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே!" என்னும் பாவேந்தரின் வைர வரிகளை வாழ்வாக்கும் ஒரு நல் தொடக்கம்! கட்டற்ற கணித்தமிழை விரும்பும் அத்துணை நல்லுள்ளங்களும் இதில் அடக்கம்! வாருங்கள்! நிகழ்வைப் பாருங்கள்! பங்கு பெறுங்கள்! சங்கம் வளர்த்த தமிழைக் கணினியிலும் வளர்த்தெடுப்போம்!

பங்குபெறும் அமைப்புகள்

நிகழ்ச்சி நிரல்

10:00 AM - 10:30 AM
[Keynote] Why Debian? Not Just Me, But You Too!

Debian stands out in a world of GNU/Linux choices for its unmatched commitment to freedom, stability, and community. This keynote shares why Debian matters from personal use to powering global infrastructure.

Senthil Kumaran S
10:30 AM - 10:45 AM
Break
10:45 AM - 1:00 PM
Self Hosting

Basics of Networking, Run a simple HTTP server, Multiplexer, Media Server, RSS Reader, DNS Blocking

Thanga Ayyanar, Mohamed Salman
Nix Shells: Supercharging Your Projects with Reproducibility, Reliability & Declarative Control

This workshop helps you to understand and utilize the power of Nix Shells for reliability, determinism and more.

Vivekanandan KS
1:00 PM - 01:45 PM
Lunch
01:45 PM - 04:00 PM
Introduction to Assembly Programming - A Forgotten Art

அசெம்ப்ளி நிரலாக்கம் அறிமுகம் - ஒரு மறந்து போன கலை

Mohan Raman
How to solve it with Clojure

In this live coding session, we take a problem statement, build a close-to-real-world application from scratch using Clojure, and experience a novel way of building things.

Tamizhvendan Sembiyan

TOSSConf25 – Stall அமைக்க அழைப்பு!

TOSSConf25 என்ற தமிழ்த் திறந்த மூல மாநாட்டில், FOSS (Free and Open Source Software) ஐத் தழுவிய ஒவ்வொருவருக்கும் stall அமைக்க அழைப்பு விடுக்கப்படுகிறது!

அமைப்புச் சாளரம் (stall) வழங்குபவராக பதிவு செய்யுங்கள்

பொது அனுமதிச்சீட்டு (General Pass)

🧑 பொதுமக்கள் (General Public)

₹200 - நுழைவு, கலந்துகொள்ளல் மற்றும் கான்ஃபரன்ஸ் கிட்

🎓 செயின்ட் ஜோசப் மாணவர்கள் (SJIT Students)

₹100 - SJIT மாணவர்களுக்கு மட்டும்

சமூக அனுமதிச்சீட்டு (Community Pass)

இப்போது நடைபெறவுள்ள TOSSConf25-இல், நாங்கள் 50 கம்யூனிட்டி பாஸ் (Community Pass) வழங்க திட்டமிட்டுள்ளோம்.

  • இந்த பாஸ் இலவசம் – ரூ.200 கட்டணம் தேவையில்லை.
  • ஆனால், இதைப் பெறுவதற்கான ஒரே நிபந்தனை – ஒரு ஸ்டால் வைக்க வேண்டும்.
  • ஒரு ஸ்டாலுக்கு ஒரு பாஸ் மட்டுமே வழங்கப்படும்.
  • மற்றவர்கள் போல ரூ.200 கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்கள் திறமையை, FOSS பங்களிப்புகளை அல்லது திட்டங்களை அனைவருக்கும் காட்சிப்படுத்துங்கள்! மறக்காமல் உங்கள் ஸ்டாலை பதிவு செய்யவும்

    📝 பதிவு செய்ய அல்லது பாஸ் பெற, கீழ்க்கண்ட ஒருங்கிணைப்பாளர்களை தொடர்புகொள்ளுங்கள்
    📞 Syed Jafer - +91-9176409201
    📞 Thanga Ayyanar - +91-9597729724

பத்தின் முடிவு (endof10.org)

endof10 என்பது பழைய Windows 10 கணினிகளை புதியதாக மாற்றாமல் Linux-ஐ நிறுவி தொடர்ந்து பயன்படுத்த ஊக்குவிக்கும் ஒரு உலகளாவிய முயற்சி. 2025 ஆம் ஆண்டு Windows 10க்கு மைக்ரோசாஃப்ட் ஆதரவை நிறுத்தும் நிலையில், புதிய கணினி வாங்க வேண்டிய கட்டாயத்தை தவிர்த்து, கட்டணமில்லாத மற்றும் தனியுரிமையை மதிக்கும் Linux இயக்குதளத்தை பயன்படுத்தலாம் என்பதை இந்த இயக்கம் வலியுறுத்துகிறது. இது மின்னணு குப்பைகளை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

எங்கள் நிகழ்வில், இதை முன்னிட்டு பயனர்களின் கணினிகளில் நேரடியாக Linux நிறுவி கொடுப்பதன் மூலம் அவர்களை Endof10 இயக்கத்தில் பங்கேற்கச் செய்வோம்.

நிகழ்விற்காக தன்னார்வமாக சேவையாற்றியவர்கள் (Volunteers)

நிகழ்வுகளின் வெற்றிக்கு பின்னால் நிற்கும் அர்ப்பணிக்கப்பட்டவர்களை சந்தியுங்கள்.

தொடர்பு

சையது ஜாபர்

நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்

+91-9176409201

contact.syedjafer@gmail.com

தங்க அய்யனார்

நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்

+91-9597729724

இடம்

செயிண்ட் ஜோசப் தொழில்நுட்ப நிறுவனம்,
செம்மஞ்சேரி, சென்னை, தமிழ்நாடு – 600119